உடையும் பிரியங்கா - நிரூப் கூட்டணி: உண்மையா? அல்லது கேம் பிளானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று கூட்டணிகள் இருப்பதாக ஏற்கனவே நேற்று கமல்ஹாசனிடம் சுருதி கூறினார் என்பது தெரிந்ததே. அவற்றில் ஒரு கூட்டணி பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரியங்கா கூட்டணி கடைசி வரை நீடித்து நிலைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய 2-வது புரமோவில் பிரியங்கா மற்றும் நிரூப் மோதிக் கொள்ளும் காட்சிகளை பார்க்கும்போது இந்தக் கூட்டணி உடைந்து விட்டதாகவே தெரிகிறது

பஞ்சதந்திர காயின்களை பயன்படுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா மற்றும் நிரூப் வாக்குவாதம் செய்வதால் இந்த கூட்டணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்பட்டாலும், நேற்று பிரியங்கா கூட்டணி குறித்து கேலியும் கிண்டலும் செய்யப்பட்டதால் இது ஒரு கேம் பிளான் ஆக இருக்கலாம் என்றும், மற்றவர்களுக்காக சண்டை போட்டுக் கொண்டு தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கலாம் என்ற ஸ்டாட்டர்ஜியாக இருக்கலாம் என்றும் ஒரு சந்தேகம் எழுகிறது.

மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கடந்த சீசன்களில் கூட்டணியாக விளையாடி அவமானப்பட்டவர்கள் தான் அதிகம் என்பதால் ஆரி போன்று தனித்தன்மையுடன் விளையாடும் போட்டியாளர்களுக்கே பிக் பாஸ் டைட்டில் கிடைக்கும் என்பதை சீசன் 5 போட்டியாளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்