நிரூப், வெளியே போ: ஆவேசமாகிய பிரியங்கா!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் பஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் மிகவும் தீவிரமாக விளையாடி வருகிறார்கள் என்பதும் பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டால் நாமினேஷன் செய்யப்படுவோம் என்பதால் பல்வேறு தடங்கல்களையும் தாண்டி பேருந்திலேயே பிரியங்கா, நிரூப், தாமரை, அபினய், அமீர் உள்பட ஒருசில போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஒருவருக்கு ஒருவர் உரையாடி எதிராளியை பலவீனமாக்கி பஸ்ஸிலிருந்து இறங்கி விடும் வேலையும் நடைபெற்று வருகிறது. அவ்வாறு பிரியங்கா பேசும் போது ’நிரூப் நீ பயந்தாங்கொள்ளி, உன்னால் இங்கே சமாளிக்க முடியாது, நீ பிக்பாஸ் வீட்டில் இருக்கவே லாயக்கில்லை, நீ வெளியே போ என பிரியங்கா ஆவேசமாக பேசுகிறார்.

ஆனால் தன்னால் இருக்க முடியும் என்றும், தான் பயந்தவன் இல்லை என்றும், தன்னால் எதையும் சமாளிக்க முடியும் என்று நிரூப் பதிலளிக்கின்றார். ஏற்கனவே தாமரையை பஸ்ஸில் இருந்து இறக்க முயற்சித்த பிரியங்கா, அது பலனளிக்காததால் தற்போது நிரூபை பஸ்ஸில் இருந்து வெளியேற்றும் நோக்கத்தில் ஆவேசமாக பேசிவருவது பலனளிக்குமா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.