பாவனியின் புதிய காதல்: இதுவாவது உண்மையான காதலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வாரம் பாவனி மற்றும் அபினய் இடையே காதல் இருப்பதாக ராஜூ கூற இந்த பஞ்சாயத்து கமல்ஹாசன் வரை சென்றது என்பதும், கமல்ஹாசன் ராஜுவை முதல் நாள் கண்டித்து, அதன் பிறகு மறுநாள் பாவனி மற்றும் அபினய் ஆகிய இருவரையும் கண்டித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பாவனி-அபினய் காதல் விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது அமீர் மற்றும் பாவனி காதல் விவகாரம் ஆரம்பித்துள்ளது. நேற்று அமீர் மற்றும் பாவனி ஆகியோர் இடையிலான ரொமான்ஸ் உரையாடல், இந்த உரையாடலுக்கு நடுவே பிரியங்கா செய்த காமெடி ஆகியவை நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாவனியின் அம்மா வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பிரியங்கா அமீரிடம் சொல்லி கொடுப்பதெல்லாம் க்யூட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பாவனி மற்றும் அமீர் இடையிலான காதல் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த காட்சிகளை கண்டு பிரியங்கா ஆச்சரியத்துடன் சந்தோஷப்படும் காட்சிகளும் உள்ளது. ஆனால் இந்த காதலாவது உண்மையான காதலாக இருக்குமா? அல்லது கடந்த நான்கு சீசன்களில் பிக்பாஸ் வீட்டில் மட்டும் காதலித்துவிட்டு அதன் பின்னர் வெளியே போன பிறகு மறந்து விட்ட காதல் போன்று இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#Day75 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/cvpMQx4t5B
— Vijay Television (@vijaytelevision) December 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments