கமல் முன்னிலையில் சண்டை போடும் நிரூப்-அக்சரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 28வது நாளாக இன்று நடைபெற உள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரமோக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சற்று முன் வெளியான இரண்டாவது புரமோவில் கமல்ஹாசன் முன்னிலையில் நிரூப் மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாமினேஷனில் உள்ள ஏழு பேர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் கொடுக்க கமல்ஹாசன் அறிவுறுத்துகிறார். இதில் யாருக்கு எந்த பட்டம் பொருந்தும் என்பதை சரியாக கணித்து கொடுக்கும்படி போட்டியாளர்களுக்கு அவர் கேட்டுக் கொள்கிறார்.

இதனை அடுத்து ’குழப்பமான மனநிலை உடையவர்’ என்ற பட்டத்தை அக்ஷராவுக்கு பிரியங்கா கொடுக்கிறார். அதற்கு பதிலடியாக பிரியங்காவுக்கு ’மற்றவர் மனதை புண்படுத்துபவர்’ என்ற பட்டத்தை அக்சரா கொடுக்கிறார்.

அதேபோல் நிரூப் அக்ஷராவுக்கு ’போலியானவர் என்ற பட்டத்தை கொடுக்கிறார். நிரூப் இந்த பட்டத்தை கொடுத்தவுடன் அக்சரா அவருடன் வாதாடுவதும், அதற்கு நிரூப் காரசாரமாக பதிலளிக்கும் காட்சிகளும் இன்றைய புரமோவில் உள்ளன.

கமல்ஹாசன் முன்னிலையிலும், பார்வையாளர்கள் முன்னிலையிலும், இருவரும் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்றைய நிகழ்ச்சியிலும் இந்த காட்சி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

மருத்துவமனையில் ரஜினியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும்

வருங்கால பைக் சாம்பியன்: குட்டித்தல க்யூட் புகைப்படம் வைரல்!

தல அஜித் நடிகர் மட்டுமின்றி பைக் ரைடிங் செய்வதில் வல்லவர் என்பதும் தற்போது அவர் உலகை பைக்கில் உலகை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அதற்கு பயிற்சி நடவடிக்கையாக வட இந்தியாவில்

முதல் வருட திருமண நாள்: காஜல் அகர்வாலின் க்யூட் இன்ஸ்டாகிராம் பதிவு!

பிரபல நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து தனது கணவருக்கு க்யூட்டான இன்ஸ்டாகிராம் மெசேஜ் ஒன்றை பதிவு செய்திருப்பது வைரலாகி வருகிறது.

படையப்பா எழுந்து வா.. பாட்ஷாபோல் நடந்து வா: ரஜினியை வாழ்த்திய பிரபலம்!

படையப்பா எழுந்து வா, பாட்ஷா போல் நடந்து வா என ரஜினியின் நெருங்கிய நண்பர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை எழுதி உள்ளது வைரலாகி வருகிறது

பிரியங்காவுக்கு எலிமினேஷன் ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இந்த வாரம் 9 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி நேற்று காப்பாற்றப்பட்டனர் என்பதும் அது போக மீதி ஏழு பேர்களில் ஒருவர்