நான் உன்னை மொட்டை அடிக்க போறேண்டா: நிரூப் மீது ஆவேசமான அபினய்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் போட்டியாளர்களுக்கு இடையே தற்போது சண்டை சச்சரவு தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே நிரூப் மற்றும் அபினய் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதங்கள் நடந்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்றும் அபினய் மற்றும் நிரூப் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. முடி வெட்டுவது குறித்த பிரச்சனை ஏற்பட்டு அதுகுறித்து காரசாரமான விவாதம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் ’நான் உன்னை மொட்டை அடிக்க போறேன்டா’ என நிரூப் மீது ஆவேசமாக அபினய் பேசும் காட்சி இன்றைய அடுத்த புரமோவில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிரூப் தனது தலைமுடியை நீளமாக வளர்த்துள்ள நிலையில் அவரை மொட்டை அடிக்கப்போறேன் என அபினய் கூறியது நிச்சயம் நிரூப்பிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இந்த வார கேப்டனான பிரியங்கா, நிரூப்பை சமாதானப்படுத்த முயற்சித்த போதும் அவர் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து ஆவேசமாக அபினய்யுடன் வாக்குவாதம் செய்து வருவதும் அதற்கு பதிலடியாக அபினய் பதில் கூறி வருவதுமான காட்சிகளும் இன்றைய புரொமோவில் உள்ளன. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் நிரூப், அபினய் ஆகிய இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
 

More News

'மாநாடு' பாடல்கள், டிரைலர் ரிலீஸ் தேதி!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து

'பாரதி கண்ணம்மா' நடிகைக்கு ஆண்குழந்தை: வித்தியாசமான புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் நடித்து வந்த ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வித்தியாசமாக பதிவு செய்துள்ளார்.

ரூ.5 கோடிக்கு வாட்ச்… சுங்கத்துறையிடம் சிக்கிய ஹர்திக் பாண்டியா… நடந்தது என்ன?

டி20 உலகக்கோப்பை போட்டியை முடித்துக்கொண்டு துபாயில் இருந்து இந்தியா திரும்பிய கிரிக்கெட் வீரர்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி: வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா' என்பதும் இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது

திருடர்களிடம் மல்லுக்கட்டிய பிரபல நடிகை.. வாக்கிங் சென்றபோது விபரீதம்!

தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் நடிகை ஒருவரை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த செல்போன்