அபினய்க்கு நீ கைப்பாவையா? இசைவாணிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட நிரூப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கால் போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் சண்டை நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி இடையே சண்டை வந்த நிலையில் இரண்டாவது புரமோவில் இசைவானி மற்றும் நிரூப், நிரூப் மற்றும் அபினய் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் நடைபெறும் காட்சிகள் உள்ளன.

குறிப்பாக ஐக்கியை கைப்பாவையாக நீ வைத்து இருக்கின்றாயோ என்று இசைவாணி கேட்க, உடனே நிரூப், ‘அப்ப அபினய்க்கு நீ கைப்பாவையா? என திருப்பிக் கேட்கிறார். உடனடியாக இதற்கு அபினய், இசைவாணிக்கு ஆதரவாக பேச, நிரூப் மற்றும் அபினய்க்கு இடையே வாக்குவாதம் முற்றும் காட்சிகள் உள்ளன.

இதுவரை ஜாலியான ஒரு நகைச்சுவை மனிதராக பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த நிரூப், கடந்த 2 நாட்களாக அவரது சுயரூபம் வெளிப்பட்டு வருவதாகவும் பார்வையாளர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் நிரூப் இப்போதுதான் தனது உண்மையான விளையாட்டை தொடங்கி உள்ளார் என்றும் கூறிவருகின்றனர்.

மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டு வரும் பிரச்சனை நிகழ்ச்சியை சுவராசியமாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.