ராஜூவை கவிழ்க்க முயற்சிக்கும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 72 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு சில கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது
இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் கொண்ட ஒரு பாக்ஸ் கொடுக்கபடுகிறது. முதல் பஸ்ஸர் அடிக்கும்போது போட்டி தொடங்கும் என்றும் மூன்றாம் பஸ்ஸர் அடிக்கும்போது எந்த போட்டியாளரின் புகைப்படம் மேலே இருக்கின்றதோ அந்த போட்டியாளர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று பிக்பாஸ் கூறுகிறார்
இதனை அடுத்து அபினய் புகைப்படம் மேலே இருக்கும்போது அந்த பெட்டியின் மீது ராஜூ ஏறி உட்கார்ந்த நிலையில் அவரை ஒட்டுமொத்த போட்டியாளர்கள் சேர்ந்து கீழே தள்ளிவிடுகின்றனர். இருப்பினும் அவர் மீண்டும் மேலே ஏறி உட்கார்ந்து கொள்கிறார். அப்போது அக்ஷரா, ‘நீ இப்படி மேலே உட்கார்ந்து கொண்டு இருக்கின்றாய், நான் மாற்ற வேண்டும் என்றால் என்ன பண்ணவேண்டும்? என்று கேட்க அதற்கு ராஜூ கேலியுடன் ‘நீ சும்மா இரு’ என்று கூறியதை அக்ஷரா கடுப்புடன் அந்த பகுதியை விட்டு வெளியேறும் காட்சிகளுடன் இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவடைகிறது. இன்றைய டாஸ்க்கில் என்னென்ன குழப்பங்கள் ஏற்படும், யார் யாருக்கு சண்டைகள் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day73 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/2SpxG2KfnN
— Vijay Television (@vijaytelevision) December 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.