கண்ணாடி டாஸ்க்: சிபி-அக்சராவை கோர்த்துவிட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு ஜோடி நியமனம் செய்யப்படுவர் என்றும் அந்த ஜோடியில் ஒருவர் செய்வதை கண்ணாடி போலவே இன்னொரு போட்டியாளர் செய்ய வேண்டுமென்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்

இதனை அடுத்து பாவனி மற்றும் ராஜூ ஜெயமோகன், இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி, தாமரை மற்றும் பிரியங்கா, வருண் மற்றும் ஐக்கி பெர்ரி, அபினய் மற்றும் நிரூப், சிபி மற்றும் அக்சரா ஆகியோர் ஜோடிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் செய்வதை இன்னொரு கண்ணாடியாக மாறி அதேபோன்று செய்ய வேண்டுமென்று அறிவிக்கின்றார்

இந்த டாஸ்க்கில் சிபி மற்றும் அக்சராவை ஜோடியாக்கியதுதான் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் இருவரும் எப்படி விளையாடப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.