மாணவியாக மாறிய பிரியங்காவை அதிகாரம் செய்யும் ராஜூ: பிக்பாஸ் புதிய டாஸ்க்!

விஜய் டிவியில் கடந்த 50 நாட்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை அதிகரிக்க ஒவ்வொரு நாளும் மூன்று புரமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் அளிக்கப்படுகிறது.

நம் நினைவால் மறக்க முடியாத தருணம் என்றால் அது பள்ளி பருவம் என்பதால் போட்டியாளர்களுக்கு பள்ளி குழந்தைகள் போலவும், ஆசிரியர்கள் போலவும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதனையடுத்து பள்ளிக்குழந்தைகளாகவும், ஆசிரியர்களாகவும் போட்டியாளர்களும் மாறுகின்றனர். சிபி தலைமை ஆசிரியராக இந்த டாஸ்க்கில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகளாகவும் ஆசிரியர்களாகவும் மாறி வரும் நிலையில் ஐக்கி பெர்ரி மாணவியாக மாறுவதற்கு அவருடைய முடியின் கலரை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். அவர் இதனால் அதிர்ச்சி அடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் சிபி தாமரையிடம், ‘டீச்சரிடம் மரியாதையாக பேச வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். அதேபோல் பிரியங்காவை டீச்சராக நடிக்கும் ராஜு ’கை காட்டு’ என்று கூற அதற்கு, ‘முடியாது’ என்று திமிராக பிரியங்கா சொல்லும் காட்சியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

திடீரென உள்ளே வந்த வைல்ட்கார்ட் போட்டியாளர்: யார் இவர்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களையும் தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை சில போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும்

என்னது விவாகரத்தா? இன்ஸ்டாவில் கணவர் பெயரை நீக்கிய பிரபல நடிகையால் பரபரப்பு!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது சோஷியல் மீடியா கணக்குகளில் இருந்து கணவர் நிக் ஜோனாஸ் பெயரை திடீரென நிக்கியிருக்கிறார்.

5,000 பெண்களுடன் உடலுறவு… Excel Sheet போட்டு அலறவிட்ட தொழிலதிபர்!

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னுடன் பாலியல் உறவு கொண்ட பெண்களின் விவரங்களை

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ஹீரோவான தமிழக வீரர்… வியக்கும் தோனி!

சையத் முஷ்டக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று (22.11.2021) டெல்லியில் நடைபெற்றது. கர்நாடகத்திற்கு எதிராக

தாங்குமா தமிழகம்? மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு