பிக்பாஸ் வீட்டிலும் யூடியூப் வேலையை பார்க்கும் அபிஷேக்: நெட்டிசன்கள் கிண்டல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தான் முதல் வார தலைவர் தேர்வு செய்யப்பட்டு நாமினேஷன் படலமும் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி போகப்போக நிகழ்ச்சியில் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் நாமினேசனில் பாவனி ரெட்டி மற்றும் வீட்டின் தலைவர் தாமரைச்செல்வி ஆகிய இருவரை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பவானி ரெட்டி மட்டும் நாமினேஷன் படலத்தில் தப்பியது எப்படி என்று சக போட்டியாளர்கள் ஆச்சரியத்துடன் இருக்கும் நிலையில் வழக்கம்போல யூடியூபில் ரிவியூ செய்யும் அபிஷேக் இந்த நிகழ்வையும் ரிவியூ செய்துள்ளார்.

பாவனி ஏன் நாமினேஷன் வரவில்லை என்றால் அவருடைய சோக கதை அனைவரையும் ஒரு பெரிய பாதிப்பை உண்டாக்கி உள்ளது, அதனால் தான் அவர் நாமினேஷனில் வந்துள்ளார் என்று கூறினார். மேலும் அவர் மற்ற போட்டியாளர்கள் குறித்து கூறிய போது ’நாதியா, வனிதா மாதிரி வெளிப்படையாக இருக்கும் ஒரு நபர் என்றும் ஐக்கி பெர்ரியுடன் பெரிதாக யாரும் அவருடன் கனெக்ட் செய்ய முடியாது என்றும், அவரை ஒரு வினோத நபராகவே பார்ப்பார்களே தவிர அவருடன் உடனடியாக யாரும் கனெக்ட் ஆக முடியாது என்று கூறுகிறார்.

மேலும் மக்களின் பார்வையில் இசை எப்படி என்றால் இந்த பொண்ணுக்குள் சோகம் இருக்கிறது ஆனால் அதை அடிக்கடி அவர் சொல்லி கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார். இதனையடுத்து அபிஷேக்கின் ரிவ்யூ குறித்து நெட்டிசன்கள் கூறும்போது, ‘பிக்பாஸ் வீட்டுக்கு வந்தும் அபிஷேக் தனது ரிவ்யூ வேலையை பார்ப்பதாக கிண்டலுடன் தெரிவித்து வருகின்றனர்.