மீண்டும் ஒரு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்: கமல்ஹாசனும் போடுவாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹைலைட்களில் ஒன்று கமல்ஹாசன் போடும் குறும்படங்கள் தான் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் சீசனில் இருந்து அவர் பதிவு செய்யும் குறும்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பதும் நல்லவர்கள் போல் நடித்து கொண்டிருக்கும் ஒரு சில போட்டியாளர்களின் முகத்திரையை குறும்படங்கள் கிழிக்கும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த சீசனில் இதுவரை கமல்ஹாசன் குறும்படம் போடவில்லை என்றாலும் நெட்டிசன்கள் அவ்வப்போது குறும்படங்களை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டுள்ள தாமரை காயின் பிரச்சனை தற்போது முற்றிய நிலையில் ஸ்ருதிக்கு காயின் எடுக்க உதவிய பாவனியின் குறும்படத்தை நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர்.
நான் ஸ்ருதி காயின் எடுக்க நான் ஹெல்ப் பண்ணவே இல்லை என அனைவர் முன்னிலையிலும் பாவனி நேற்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் நெட்டிசன்கள் போட்ட குறும்படத்தில் அவர் ஸ்ருதி காயினை எடுக்க உதவி செய்த காட்சிகள் உள்ளன. இதனை அடுத்து பாவனியின் முகத்திரையை நெட்டிசன்கள் கிழித்த நிலையில் கமல்ஹாசனும் இதேபோல் குறும்படம் போடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#Pavni real face exposed, trying to escape from what she did.
— Bigg Boss & Survivor (tamil) (@bbstamil) October 26, 2021
Oru Kurumpadam parcel this week! @vijaytelevision #BiggBossTamil #BiggBossTamil5 pic.twitter.com/CpAfoXLQg2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com