முதல் வாரமே வெளியேறினாரா இந்த பிக்பாஸ் போட்டியாளர்? அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் ஒரு வாரம் மட்டுமே ஆகிய நிலையில் ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் போட்டியாளர்கள் அனைவரும் கடந்த 5 நாட்களாக கலகலப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் சந்திக்கிறார் என்பதும் இன்றைய முதல் புரமோவில் கூட அவர் வெற்றி குறித்து தனது கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய புரமோவை கூர்ந்து கவனித்த நெட்டிசன்கள் அதில் நமீதா மாரிமுத்து இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் ’சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நமீதா மாரிமுத்து அவர்களே போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்’ என பிக்பாஸ் குரலும் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நமிதா மாரிமுத்து தனது கதையை அனைவரும் உருக வைக்கும் அளவுக்கு கூறிய நிலையில் இன்று அவர் திடீரென வெளியேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.