முதல்முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்க தான்: கமல் கூறியது யாரை?

முதல்முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்கதான் என இசைவாணியை பார்த்து கமல்ஹாசன் கூறியது பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் கேப்டன் டாஸ்க்கில் அபிநய் வென்ற நிலையில் இசைவாணி தன்னுடைய நாணயத்தை பயன்படுத்தி தன்னையே கேப்டனாக மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் இசைவாணி எவ்வாறு கேப்டனாக செயல்பட்டார் என்று கமல்ஹாசன் கேட்க அதற்கு சிபி கூறியபோது ’இசைவாணி கேப்டன்ஷிப் சரியில்லை என்று கூறினார்.

தாமரை கூறியபோது ’உணவு பரிமாறும்போது அன்பாக பரிமாறவில்லை, கொஞ்சம் எரிச்சலாக பரிமாறியதாக கூறினார். அதேபோல் வருண் மற்றும் நிரூப் ஆகிய இருவரும் இசைவாணியின் கேப்டன்ஷிப்பில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து முதல் முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்க தான் என இசைவாணியை பார்த்து கமல்ஹாசன் கூற இசைவானி முகம் அதிர்ச்சியில் உறைந்ததை இன்றைய இரண்டாவது புரமோவில் பார்க்க முடிந்தது.