நிரூப் இந்த வேலையை சரியா செஞ்சுருக்காரு: பாராட்டுகிறாரா கமல்ஹாசன்?

நிரூப் இந்த வேலையை சரியாக செய்திருக்கிறார் என்று கமல்ஹாசன் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அடுத்த புரமோவில் உள்ள காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரமோவில் கமல்ஹாசனின் பேசும்போது பிக்பாஸ் என்றாலே ஸ்கிரிப்ட் என்றும் ஏற்கனவே எழுதி வைத்தது என்றும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அது இல்லை என்பதை ஒவ்வொரு சீசனிலும் உள்ள போட்டியாளர்களே நிரூபித்து வருகின்றார்கள் என்று கூறிய கமல்ஹாசன் இந்த சீசனில் நிரூப் விளையாடிய விதம் யாருக்கும் பிடிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்.

இதனை அடுத்து வருண், பிரியங்கா, அக்சரா ஆகியோர் தங்களுக்கு பிடிக்கவில்லை என தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நிரூப் விளையாடிய விதம் யாருக்கு பிடித்திருந்தது என கமல்ஹாசன் கேட்க அதற்கு ராஜூ ஜெயமோகன் தனக்கு இன்ட்ரஸ்டிங்கா இருந்தது என்று தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்றால் ஸ்கிரிப்ட் என்று கூறி வரும் நிலையில் அந்த ஸ்கிரிப்டை அவ்வப்போது நீங்களே மாற்றி எழுதலாம், அவ்வாறு மாற்றி எழுதும் வேலையை செய்திருக்கிறார் நிரூப் என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். இது பாராட்டா? அல்லது வஞ்சப்புகழ்ச்சி அணியா? என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

யாரும் நடிக்க துணியாத கேரக்டரில் ரகுல் ப்ரீத்திசிங்: பரபரப்பை ஏற்படுத்திய ஃபர்ஸ்ட்லுக்!

இதுவரை யாரும் நடிக்க துணியாத கேரக்டரில் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலரை கைப்பிடிக்கும் சீரியல் நடிகை: திருமண தேதியும் அறிவிப்பு!

ஜீடிவியில் ஒளிபரப்பான தொடரில் நடித்த நடிகை ஒருவர் தனது காதலரை கைப்பிடிக்க இருப்பதாகவும் திருமண தேதியை அவர் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த இரண்டையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்: சாட்டையை கையில் எடுக்கும் பிக்பாஸ் கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி. ஞாயிறு அன்று கமல் தோன்றும் இரண்டு நாட்களும் சுவராஸ்யமாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று கமல் தோன்றும் நாள்

பா ரஞ்சித் - விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தற்போது புதுமுகங்கள் நடிக்கும் 'நட்சத்திரங்கள் நகர்கிறது' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்யலாமா என கேட்ட ரசிகருக்கு புகைப்படத்தின் மூலம் பதிலளித்த நடிகை!

திருமணம் செய்து கொள்ளலாமா? என தொலைக்காட்சி நடிகை ஒருவரை ரசிகர் ஒருவர் கேட்ட நிலையில் அதற்கு நாசுக்காக புகைப்படம் ஒன்றின் மூலம் அந்த நடிகை பதிலளித்துள்ளது