கமல்ஹாசனிடமே ரீல் விடும் அபிஷேக்: நமட்டு சிரிப்புடன் இன்றைய அடுத்த புரமோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபிஷேக் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை பெற்று உள்ளார் என்பதும் அவர் எப்போது வெளியே போவார் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபிஷேக்கின் ஆட்டம் ஜாஸ்தியாகி விட்டது என்பதும் அவர் இஷ்டத்துக்கு கதை அளந்துகொண்டு வருகிறார் என்பதை சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அதற்கு முன் அனைத்து சீசன்களையும் முழுவதுமாக பார்த்து விட்டு அதன் ஸ்டாட்டர்ஜியை புரிந்து கொண்டு தான் வருவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அபிஷேக் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை என்று கமல்ஹாசனிடமே கடந்த வாரம் கூறியதை கமல் உள்பட யாரும் நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் கமல்ஹாசன் அதனை அழுத்தி அழுத்தி கேட்க, மீண்டும் மீண்டும் கமல்ஹாசனிடம் ரீல் விடும் அபிஷேக்கின் காட்சிகள் உள்ளன. நிஜமாகவே நீங்கள் இங்கே வருவதற்கு முன்னால் பிக்பாஸ் பார்த்ததில்லையா என கமல் கேட்க, சத்தியமாக நான் பார்த்ததில்லை என்று அபிஷேக் கூறிவிட்டு, அதன் பின்னர் திரும்பவும் ’வார இறுதியில் நீங்கள் வரும்போது மட்டும் நான் பார்ப்பேன் என்று கூறுகிறார்.

அப்படியென்றால் கொஞ்சம் கொஞ்சம் பார்த்தீர்களா என்று கமல் கேட்க, ‘இல்லை இல்லை புரமோமாவை மட்டும் தான் பார்ப்பேன், எபிசோடு பார்த்ததே இல்லை என்று அபிஷேக் கூறும்போதும் கமலின் நமட்டுச் சிரிப்பு இன்றைய புரமோவின் ஹைலைட். பின்னர் ’என்கிட்ட மாத்தி மாத்தி ஒன்னும் பேசலியே என்று கமல் கூறுவதிலிருந்து இன்றைய எபிசோட் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் 'வா சாமி' பாடல் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளி அன்று

'வலியை தாங்கிகிட்டவன் தான் ஜெயிக்க முடியும்: 'எனிமி' டிரைலர்

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனிமி' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர்

அவதூறு வழக்கு தொடர்ந்த சமந்தாவுக்கு நீதிபதி கூறிய அறிவுரை!

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்ததையடுத்து அவரது விவாகரத்து குறித்து ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பல்வேறு வதந்திகள் வெளிவந்தன

பிரியங்காவுக்கு கமல்ஹாசன் கேள்வி: நெட்டிசன்களின் குறும்படம் வேலை செய்யுது போல!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்ஷரா கேமரா முன் எழுதி காண்பித்துவிட்டு அதை டிஸ்போஸ் செய்துவிடுவதாக பிரியங்கா குற்றம்சாட்டினார் என்பதையும் அதே போல் பிரியங்காவும் நிரூப் கையில்

அபிஷேக்கை அலறவிட்ட கமல், தப்பித்த 4 போட்டியாளர்கள்: இன்றைய பிக்பாஸ் ஹைலைட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் கமலஹாசன் ரூல்ஸை மீறிய போட்டியாளர்களிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க உள்ளார் என்று கூறியதை அடுத்து இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும்