பிரியங்காவுக்கு எலிமினேஷன் ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இந்த வாரம் 9 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி நேற்று காப்பாற்றப்பட்டனர் என்பதும் அது போக மீதி ஏழு பேர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே.

வருண், அபிநய், அக்ஷரா, சின்னப்பொண்ணு, பாவனி ரெட்டி, சுருதி மற்றும் பிரியங்கா ஆகிய ஏழு பேர்களில் யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்த கமல்ஹாசன் கூறும் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் இன்று வெளியேற்றப்படும் போட்டியாளர் யார் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். வீட்டு ஞாபகம் வந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒருத்தர் ஸ்னாக்ஸ் ஞாபகம் வந்து அழுது இருக்கிறார் என்று கூறியவுடன் பிரியங்கா எழுந்து நிற்க, அவர்தான் எலிமினேஷனோ என்ற அச்சம் ஏற்பட்டது.

இதனை அடுத்து ’இருங்க, நீங்க எழுந்தவுடன் நான் சரி என்று சொல்லி விடுவேனா? கார்டில் என்ன இருக்கு என்று பார்ப்போம் என்று கூறிய கமல்ஹாசன் கார்டை எடுத்து பிரியங்கா காப்பாற்றப்பட்டார் என்றும் அறிவிக்கிறார். பிரியங்காவுக்க்கு ஒருசில வினாடிகள் எலிமினேஷன் ஷாக் கொடுத்து விட்டு அதன் பின்னர் அவர் காப்பாற்றப்பட்டார் என்று கூறியதை அடுத்தே பிரியங்கா நிம்மதி பெருமூச்சு விட்டார் என்பது குறிப்பிடதக்கது.

More News

எழில் கொஞ்சும் வனப்புடன் நடிகை ரித்து வர்மா… அட்டகாசமான புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருபவர் நடிகை ரித்து சர்மா. இவர் கௌதமன் மேனன் இயக்கத்தில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியவர் இவரா?

இந்த வாரம் சின்னப்பொண்ணு, அக்சரா, பாவனி, ஸ்ருதி, இசைவாணி, அபினய், இமான், வருண், பிரியங்கா ஆகிய ஒன்பது பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பதும் அவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரரின் தங்கை… வைரல் தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் தீபக் சாஹரின் தங்கை மால்தி சாஹர் தற்போது நயன்தாரா-

கேஷுவல் கெட்டப்பில் நடிகை அஞ்சலி வெளியிட்ட ஹாட் புகைப்படம் வைரல்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அஞ்சலி. இவர் ராம் இயக்கத்தில் கடந்த 2007

பண்டையக் காலத்தில் பெண் கல்வி இருந்ததா? பதில் சொல்லும் ஒற்றைச் சிற்பம்!

பண்டையக் காலத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா?