குறை சொன்ன அண்ணாச்சிக்கு அக்சரா கொடுத்த பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று பிக்பாஸ் வீட்டில் ’சினிமா சினிமா’ என்ற டாஸ்க் நடைபெற்ற நிலையில் அக்ஷராவின் நடிப்பை குறை சொல்லிய இமான் அண்ணாச்சிக்கு அக்ஷரா கொடுத்த பதிலடி இன்றைய அடுத்த புரமோவில் வந்துள்ளது
நேற்று ’சினிமா சினிமா’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அக்ஷராவுக்கு ’படையப்பா’ படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த கேரக்டரில் அவர் நடித்ததை இன்று இமான் அண்ணாச்சி விமர்சனம் செய்யும் காட்சிகள் புரமோவில் இடம்பெற்றுள்ளன
அக்ஷராவின் நடிப்பின் மீது எனக்கு ஈடுபாடு வரவில்லை என்றும் அந்த படத்தை அவர் பார்க்கவில்லையா அல்லது நீலாம்பரி கேரக்டர் குறித்து அவருக்கு தெரியவில்லையா என்று எனக்கு புரியவில்லை என்று இமான் அண்ணாச்சி கூறுகிறார்
இதனை அடுத்து சக போட்டியாளர்கள் இமான் அண்ணாச்சியிடம் அக்ஷராவின் நடிப்பை குறை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அதன்பிறகு இமான் அண்ணாச்சி, ‘அக்ஷரா ஏன் என்னிடம் நீலாம்பரி மாதிரி பேசவில்லை என்று கேட்க அதற்கு அக்சரா, ‘உங்கள் வயதுக்கு நான் மரியாதை கொடுத்தேன். உங்களை சொடக்கு போட்டு கூப்பிட்டு, இப்படி உட்காரு என்று சொல்வதற்கு எனக்கு மனம் வரவில்லை என்று கூறியது இமான் அண்ணாச்சிக்கு மிகப்பெரிய பதிலடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Day31 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/x09wUeAHVg
— Vijay Television (@vijaytelevision) November 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments