நிரூப், வருண் பற்றிய உண்மையை உடைத்த ஐக்கி பெர்ரி: வீடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஐக்கி பெர்ரி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆன பிறகு முதல் முறையாக அவர் ரசிகர்களுடன் தனது சமூக வலைதளத்தின் மூலம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் அவர் நிரூப் மற்றும் வருண் குறித்த சில உண்மைகளை உடைத்துள்ளார். நிரூப் குறித்து அவர் கூறுகையில், ‘நிரூப் குறித்து வெளியில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னை பொறுத்தவரை நிரூப் தந்திரமாக விளையாடுகிறார் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் நியாயமாக தான் விளையாடுகிறார். குறிப்பாக அவரை நான் அந்த பொம்மை டாஸ்க்கில் தான் நன்றாக புரிந்துக்கொண்டேன். நாங்கள் இருவரும் விளையாடிய போது என்னை அவர் கைப்பாவையாக பயன்படுத்தியுள்ளதாக வீட்டில் உள்ளவர்கள் சிலர் கூறி குற்றஞ்சாட்டினார். ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. பொம்மை டாஸ்க்கில் இருவரும் நேருக்கு நேராக மோதி விளையாடுவோம், யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று தான் நான் சொன்னேன், நிரூப்பும் அதை ஏற்றுக்கொண்டார் என்று ஐக்கி பெர்ரி கூறினார்.

அதேபோல் வருண் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய போது, ‘வருண் நன்றாக விளையாடுபவர். என்னை பொறுத்தவரை அவர் யாரிடமும் பர்சனலாக எதையும் எடுத்து விளையாடுவதில்லை. குறிப்பாக என்னிடம் அவர் பர்சனலாக கோபம் காட்டவில்லை. ஆனால் நிரூப் உடன் விளையாடும்போது மட்டும் அவர் பர்சனலாக சிலவற்றை எடுத்துக் கொள்வது போல் எனக்கு தோன்றியது’ என்று கூறினார். ஐக்கி பெர்ரியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.