close
Choose your channels

ரஜினி மருமகனின் நண்பர், விஜய் படத்தால் பிரபலம்: பிக்பாஸ் போட்டியாளரின் இன்னொரு பக்கம்!

Thursday, October 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான நடிகர் சிபி சக்கரவர்த்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பதும் அது மட்டுமின்றி தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் மூலம் திரையுலகில் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகள் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சிபிசக்கரவர்த்தி என்பதும் இவர் விசாகன் நடித்த ’வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகின் கவனத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பதும், இந்த படத்தால் விஜய் ரசிகர்களால் பாராட்டப்பட்டார் என்பதும் இந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக சென்றிருக்கும் சிபிச்சக்கரவர்த்தி ஆரம்பம் முதலே சரியான கோணத்தில் விளையாடி வருகிறார் என்பதும் ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வரும் என்றும் அந்த கோபம் தான் அவருக்கு பிளஸ் மைனஸ் என இரண்டும் ஆக இருக்கும் என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து திரையுலகிலும் தனக்கென தனி இடம் பிடிக்க வேண்டும் என்பதை சிபி சக்கரவர்த்தியின் இலக்கு என்பதும் அந்த இலக்கை அவர் அடைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment