பாக்ஸிங் தெரியுமா? முடிஞ்சா வந்து பாருங்க: சிபி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு மாதத்தில் இதுவரை பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் பொம்மை டாஸ்க் போல் போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தியது வேறு இல்லை என்று தான் தெரிய வருகிறது

குறிப்பாக நேற்று அக்ஷராவை நிரூப் பிடித்த விதம் குறித்து ஆவேசமாக பேசப்பட்டது என்பதும் அக்ஷராவுக்கு இவ்வளவு கோபம் வருமா என்று அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து சிபி, நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசி வருகின்றனர்,. சிபி இதுகுறித்து கூறிய போது, எனக்கு அக்சரா மீதோ அல்லது வேறு யார் மீதோ கோபம் இல்லை. நேற்று அக்சரா அவர் சொன்னதற்கு எதிராக அவரே நடந்துகொண்டார்.

ஒரு பொம்பளையை எப்படி பிடிக்கிறாயே என வருணிடம் அக்சரா கேட்டார். அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு பாக்ஸிங் தெரியும் என்றும், முடிந்தால் வந்து பாருங்க என்று கூறினார்.

ஆனால் அதே செயலை இன்னொருத்தர் பண்ணும் போது எவ்வளவு கோபம் வருகிறது. எல்லாமே இரட்டை வேடத்தில் நடந்துகொள்கின்றனர் என்று சிபி கூறினார். அப்போது நிரூப் தான் அக்சராவை தவறாக பிடிக்கவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டார். அதனால் நான் எதுவும் தப்பாக செய்யவில்லை என்று நிரூப் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.

More News

பிரபல நடன இயக்குனர் புற்றுநோயால் மரணம்: பாரதிராஜா இரங்கல்!

பிரபல நடன இயக்குனர் ஒருவர் புற்றுநோயால் காலமானார். அவரது மறைவிற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பனதா? ஆய்வு கூறும் புதுத்தகவல்!

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று சுவிட்சர்லாந்தில் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

'அண்ணாத்த' படத்திற்கு கீர்த்தி சுரேஷின் சம்பளம் இத்தனை கோடியா?

பொதுவாக திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர்கள் தங்கை கேரக்டரில் நடிப்பதற்கு தயங்குவார்கள் என்பதும், ஆனால் அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கை என்பதால் கீர்த்தி சுரேஷ், 'அண்ணாத்த'

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' முக்கிய அப்டேட் தந்த இயக்குனர் பாண்டிராஜ்!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக இந்த படத்தின்

ஓடிடியில் ரிலீஸாகும் பிரபுதேவாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடியிருந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்