close
Choose your channels

அலேக்காக தூக்கிய கணவர்: பாவனி ரெட்டியின் திருமண வீடியோ வைரல்

Thursday, October 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டி தனது உருக்கமான கதையை சமீபத்தில் கூறினார் என்பதும் குறிப்பாக தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதையும் பாதியிலேயே தன்னை விட்டு விட்டுப் போனதையும் அறிந்து அவர் சாகும் போது தான் அழவில்லை என்றும் அவர் மீது கோபம் தான் வந்தது என்றும் கூறியது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் உருக வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாவனி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகி விட்டதை அடுத்து அவருடைய பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது பாவனி ரெட்டியின் திருமண வீடியோ வைரலாகி வருகிறது. திருமணத்தின்போது தாலி கட்டி முடித்ததும் பாவனி ரெட்டியை அலேக்காக அவரது கணவர் தூக்கி கொஞ்சுவது, மெட்டி போடுவது உள்பட சில காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு அழகான தம்பதிக்கா இந்த நிலைமை? என்று கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment