பிக்பாஸ் சீசன் 5: இவர்களில் ஒருவர் இந்த வாரம் எலிமினேஷனா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள 17 பேர்களில் தலைவி தாமரைச்செல்வி மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரை தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர் என்பதும் இவர்களுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிக்பாஸ் போட்டியாளர்களில் மூவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும், மிகக்குறைந்த வாக்குகளை அவர்கள் மூவரும் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன
அபிஷேக், சின்ன பொண்ணு மற்றும் அபினய் ஆகிய மூவரும் தான் மிக குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இவர்களில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஏற்கனவே அபிஷேக்கிற்கு சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒவ்வொரு சீசனிலும் ஒரு வயதான போட்டியாளர் முதலில் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளியேறுவது அபிஷேக்கா? அல்லது சின்ன பொண்ணா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout