பிக்பாஸ் எவிக்சன்: மக்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளர் வெளியேற்றம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய ஒன்பது போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கிய நிலையில் இசைவாணி, தாமரைச்செல்வி, அக்ஷரா மற்றும் பாவனி ரெட்டி ஆகிய நால்வர் காப்பாற்றப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் மக்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளர் என நெட்டிசன்கள் கேலி செய்து வரும் அபிஷேக் இந்த வாரம் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த பார்வையாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த தகவலின்படி அபிஷேக் இந்த வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் அவரது வெளியேற்றத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த வாரமே அபிஷேக் தான் குறைவான வாக்குகள் பெற்று இருந்தார் என்றும் அவர் தான் வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கடந்த வாரம் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது அபிஷேக் வெளியேறி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவாகி வரும் கமெண்ட்ஸ்களில் இருந்து தெரிய வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் வெளியேறும் போது கிட்டத்தட்ட பார்வையாளர்கள் அனைவருமே மகிழ்ச்சி அடைவது அனேகமாக இதுதான் முறையாகத்தான் இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com