நேற்று கைதட்டி சந்தோஷம் அடைந்த பாவனிக்கு இன்று அதிர்ச்சி: கமல் போடும் குறும்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக அபினய் மற்றும் பாவனி இடையிலான பிரச்சனை நடந்து வந்தது என்பதும் குறிப்பாக ராஜு மற்றும் சிபியிடம் இது குறித்து ஆவேசமாக கோபப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.
நேற்று கமல்ஹாசன் முன்னிலையில் இந்த பிரச்சனை நடந்த போது பெரும்பாலும் பாவனிக்கு ஆதரவாகவே கமல்ஹாசன் பேசினார் என்பதும் ராஜுவை கண்டித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருப்பது போல் தெரிகிறது. இதுகுறித்து ராஜூ கமலிடம் கூறியபோது, ‘பாவனி என்னிடம் சொன்னார், எனக்கும் அதேபோல் ஒரு உணர்வு இருக்கின்றது, அவர் என்கிட்ட அப்படித்தான் பழகின்றாரோ என்று, அவரிடம் என்னால் சொல்ல முடியவில்லை’ என்று ராஜூ கூறுகின்றார்.
இதனையடுத்து ‘ஏன்’ என பாவனியிடம் கமல் கேட்க, ’உங்களுக்கு எப்படி தோணுகிறதோ, எனக்கும் அப்படித்தான் தோணுகிறது ராஜூ’ என்று பாவனி கூற. ‘அப்படியென்றால் அதைப்பற்றி பேசாதீங்க என்று சொல்லிவிட்டு, ஆமா எனக்கு அது இருக்குது என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே தெரியவில்லை’ என கமல் கூறினார்.
மேலும் ‘பாவனி அப்படி என்ன சொல்லி இருப்பார் என்று நீங்கள் அறிய விரும்புகிறீர்களா என்று அபினயிடம் கமல் கேட்க, ’கண்டிப்பாக நான் அறிய விரும்புகிறேன்’ என்று அபினய் சொல்ல இதனையடுத்து, அபினய்க்காக பாவனி என்ன சொன்னார் என்பது குறித்த குறும்படத்தை கமல்ஹாசன் போடுகிறார். அந்த குறும்படத்தில் என்ன இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil இல் இன்று.. #Day70 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/DxiNQZaHLk
— Vijay Television (@vijaytelevision) December 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments