close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களும் அவர்களின் முழு விபரங்களும்!

Monday, October 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒவ்வொரு போட்டியாளரையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த 18 போட்டியாளர்கள் யார் யார்? அவர்களின் விபரங்கள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1. கானா பாடகி இசை வாணி: பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக கலந்து கொண்ட கானா பாடகியான இவர் 100 சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்றவர்

2. ராஜு ஜெயமோகன்: விஜய் டிவியில் ஒருசில சீரியல்களில் நடித்துள்ள இவர், மிமிக்ரி கலைஞர்

3. மதுமிதா: ஜெர்மனியை சேர்ந்த இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றும் இவர் மாடலிங்கில் மிகுந்த ஆர்வமுடையவர்.

4. அபிஷேக் ராஜா: யூடியூப் திரை விமர்சகர்

5. நமிதா மாரிமுத்து: திருநங்கையான இவர் மாடலிங் துறையில் உள்ளார்.

6. பிரியங்கா: விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி

7. அபினய்: காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரி தம்பதியின் பேரன். விவசாய பண்ணை நடத்தி பல விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

8. நடிகை பாவனி ரெட்டி: தொலைக்காட்சி சீரியல் நடிகை

9. பாடகி சின்ன பொண்ணு: நாட்டுப்புற பாடகி, சந்திரமுகி படத்தில் நடித்துள்ளார்.

10. நதியா சிங்: மலேசியா மாடல்

11. நடிகர் வருண்

12. இமான் அண்ணாச்சி: நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளர்

13. ஸ்ருதி: மாடல், கூடைப்பந்து வீராங்கனை

14. அக்சரா: மாடல்

15. ஐக்கி பெர்ரி: டாக்டர் மற்றும் ராப் இசை கலைஞர்

16. தாமரை செல்வி: நாடக கூத்து கலைஞர்

17. சிபி சந்திரன்: தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாணவராக நடித்தவர்

18. நிரூப் நந்தகுமார்: மாடல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment