முதல் நாமினேஷனில் 15 போட்டியாளர்கள்: தப்பித்த ஒரே ஒருவர் இவர்தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது வாரமாக தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் முதல் வார தலைவர் தேர்வு செய்வதற்காக நடந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று தாமரைச்செல்வி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு பிக்பாஸ் வாழ்த்து தெரிவித்தார்.
இதனை அடுத்து முதல்வார நாமினேசன் படலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 போட்டியாளரை நாமினேசன் செய்தனர். முதல் ஒரு வாரத்தில் பெரிய அளவில் சக போட்டியாளர்கள் மீது அதிருப்தி இல்லை என்றாலும் சவாலான போட்டியாளர்கள் மற்றும் இந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகியவற்றை வைத்து நாமினேஷன் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் வாரத்தில் யார் யார் நாமினேஷன் படத்தில் உள்ளனர் என்பது குறித்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார். நாதியா, ராஜூ, ஐக்கி பெர்ரி, நிரூப், ஸ்ருதி, மதுமிதா, இமான், சிபி, இசைவாணி, வருண், சின்னப்பொண்ணு, ப்ரியங்கா, அபினய், அபிஷேக் மற்றும் அக்சரா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் போட்டியாளர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 பேர் கலந்து கொண்ட நிலையில் நமீதா எதிர்பாராதவிதமாக வெளியேறிவிட்டதை அடுத்து தற்போது உள்ள 17 போட்டியாளர்களில் 15 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் என்பதால் தாமரைச்செல்வியை யாரும் நாமினேட் செய்யவில்லை. இதனை அடுத்து நாமினேஷன் படலத்தில் சிக்காத ஒரே போட்டியாளர் பாவனிரெட்டி என்பதும், அவரை யாருமே நாமினேட் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் சிக்கியுள்ள 15 போட்டியாளர்களில் வெளியேறும் போட்டியாளர் யாராக இருக்கும் என்பதை கணித்து கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com