இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவாரா பாலாஜி?

  • IndiaGlitz, [Tuesday,January 05 2021]

கடந்த வாரம் முழுவதும் பாலாஜி சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தார் என்பதும் கமல்ஹாசனும் அவரை இரண்டு நாட்களும் கண்டித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த கசப்பான நிகழ்வுகளை மனதில் கொள்ளாமல் இந்த வாரம் புத்துணர்ச்சியுடன் மீண்டும் போட்டியில் களம் இறங்கியுள்ளார்.

இந்த வாரம் நடைபெறும் ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம் என்ற ஒரு வாய்ப்பு இருக்கும் நிலையில் அந்த டாஸ்க்கில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் பாலாஜி. மொத்தம் ஐந்து சுற்றுகள் உள்ள இந்த டாஸ்க்கில் முதல் சுற்றில் அதிகபட்சமாக 7 புள்ளிகளை பெற்றாலும் இரண்டாவது சுற்றில் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இந்த நிலையில் மூன்றாவது சுற்றிலும் பாலாஜி 7 புள்ளிகள் பெற்று உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து பாலாஜி 3 சுற்றுகளிலும் சேர்ந்து 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். பாலாஜியை அடுத்து ரம்யாவும் அதனையடுத்து ரியோ மற்றும் ஆரியும் உள்ளனர்.

இன்னும் இரண்டு சுற்றுகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் பாலாஜி முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.