இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது யார்? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் என 11 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் யார் வெளியேறுவார் என்ற கணிப்பின்படி வேல்முருகன் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. வேல்முருகன் பாட்டு பாடுவதை தவிர பிக்பாஸ் வீட்டில் உருப்படியாக எதுவும் செய்தது போல் தெரியவில்லை என பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் அவர் அர்ச்சனா குருப்புக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தன்னால் மற்றவர்கள் மனம் புண்பட்டுவிடக்கூடாது என்று அவர் மனதில் தோன்றுவதை பேச தயங்குகிறார் என்றும் அவர் மீது விமர்சனம் உள்ளது. வேல்முருகன் ஒருவேளை இந்த வாரம் தப்பித்துவிட்டால் ஆஜித் வெளியேற வாய்ப்பு உள்ளது. ஆஜித்தும் பாட்டு பாடுவதை தவிர வேறு எதுவும் செய்தது போல் தெரியவில்லை

மேலும் அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகியுள்ளார் சம்யுக்தா. அர்ச்சனாவின் குருப்பிஸம், சனம்ஷெட்டியின் சிண்டுமுடியும் போக்குக்கு அவர் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சனம்ஷெட்டிக்கும் அவருக்கும் பிரச்சனை இருப்பதால் மீண்டும் இருவருக்கும் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சனம்ஷெட்டி கேப்டனாக அர்ச்சனா குருப்பில் உள்ள பாலாஜியே உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் வாரம் புதிய என்ட்ரியாக பாடகி சுசித்ரா வரவும் வாய்ப்புள்ளது என்பதால் அடுத்த வாரம் நிகழ்ச்சி பரபரப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்த கட்டிங்கள்… ஒரே நாளில் 196 முறை நில அதிர்வு.. காண சகிக்காத நிகழ்வு!!!

துருக்கியில் நேற்று அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது 7.0 ரிக்டர் அளவாகக்  கணிக்கப்பட்ட

இணையத்தில் வைரலாகும் வெங்கட்பிரபு மகளின் பாடல்!

இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் பேத்தியும், வெங்கட்பிரபுவின் மகளுமான ஷிவானி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் தற்போது பயின்று வருகிறார்

கப்பலையே தாக்கி அழிக்கும் ஏவுகணை… இந்தியக் கடற்படையின் புது அசத்தல்!!!

வங்கக் கடல் பகுதியில் கப்பலைத் தாக்கி அழிக்கும் புது ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.

ஒரு கிலோ டீ தூள் விலை ரூ.75,000… தலைச் சுற்ற வைக்கும் தகவல்!!!

அசாம் மாநிலத்தின் குவஹாத்தி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் விளைந்த சிறப்பு தேயிலை (டீ) தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை ஆகி இருக்கிறது.

வியட்நாமை சூறையாடிய சூறாவளி… 100 க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு!!!

வியட்நாமில் கனமழைக்கு நடுவே “மோலேவே” எனும் சூறாவளி புயல் வீசி கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது