வெளியேறும் ரமேஷை விடைபெற கூட அனுமதிக்காத கமல்: அன்பு குரூப் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படவிருக்கும் நிலையில் அந்த இரண்டு பேரில் ஒருவர் ரமேஷ் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது
மூன்றாவது புரமோவில் நாமினேஷன் பட்டியலில் உள்ள ரமேஷை கன்பெக்சன் அறைக்கும், சோம்சேகரை ஸ்டோர் ரூமுக்கும் செல்லுமாறு கமல் கூறுகிறார். இவர்கள் இருவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்றும், வெளியேற்றப்படும் நபர் இங்கே என்னை நேரடியாக வந்து சந்திப்பார் என்றும் கமல் கூறுகிறார். இதனை அடுத்து இன்று வெளியேறும் நபர் சக போட்டியாளர்களிடம் விடை பெற்றுக் கொள்ளக் கூட அனுமதிக்கப்படாமல் அப்படியே கமல்ஹாசனை சந்திக்க வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியேற காத்திருக்கும் இரண்டு பேர்களுமே அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் உள்ளவர்கள் என்பதால் அர்ச்சனாவின் அன்பு குரூப்பினர் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மேலும் இந்த வாரம் மோசமான போட்டியாளர் என்று அனிதா சர்ச்சைக்குரிய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கமல்ஹாசன் முன் இன்று மீண்டும் மோசமான போட்டியாளர் யார் என்பதை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அப்போது மோசமான போட்டியாளராக நிஷா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நிஷாவை சிறையில் அடைக்கிறார் ரியோ.
மொத்தத்தில் இன்று அர்ச்சனாவின் அன்பு குரூப்பை கமல் முழுக்க முழுக்க வச்சு செய்கிறார் என்பது இந்த மூன்றாவது புரமோ வீடியோவில் இருந்து தெரியவருகிறது
#BiggBossTamil இல் இன்று.. #Day69 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/oKn1FdLkxW
— Vijay Television (@vijaytelevision) December 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments