யார் யாருக்கு எந்த வாக்கியம்: டாஸ்க்கின் முடிவுகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் நடந்த வாக்கியம் பொருத்தம் டாஸ்கில் ஒவ்வொருவருக்கும் வந்த வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ அவர்களுடைய கட்-அவுட்டில் ஒட்ட வேண்டும் என்று பிக்பாஸ் கூறியதை அடுத்து இதுவரை வந்த வாக்கியம் யார் யாருக்கு பொருந்தியது என்பதை பார்ப்போம்.
ரூபம் செம்மை செய்: இந்த வாக்கியம். அதாவது உங்களுடைய உண்மையான நல்ல குணங்கள் எண்ணம் உயர்வாக இருக்க செம்மைப் படுத்திக் கொள்ளுங்கள் என்ற இந்த வாக்கியம் பாலாவுக்கு சென்றதையடுத்து அவரது கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.
கூடிப் பிரியேல்: நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே என்ற அர்த்தம் கொண்ட இந்த வார்த்தை கேபிக்கு சென்றதை அடுத்து அவருடைய கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.
காலம் அழியேல்: காலத்தை வீணாக்காதே என்ற இந்த வாக்கியம் ஷிவானிக்கு ஒட்டப்பட்டது
சுமையினுக்கு இளைத்திடேல்: பொறுப்பினை கண்டு ஓடாதே என்ற வார்த்தை பாலாவின் கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது
தேசத்தோடு ஒட்டிவாழ்: இந்த வாக்கியம் ஆரியின் கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது
நன்றி மறவேல்: இந்த வாக்கியம் சோம்க்கு கிடைத்தது
துன்பம் மறந்திடு: என்ற வாக்கியம் பாலாவுக்கு கிடைத்ததை அடுத்து அவரது கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.
ஒளவியம் பேசேல்: பொறாமை கண்டு பேசுவது கூடாது என்ற வார்த்தையும் ஆரிக்கே கிடைத்ததை அடுத்து அவரது கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.
தீயினால் சுட்டி புண் உள்ளாறும்: என்ற வார்த்தை பாலாவுக்கு கிடைத்ததை அடுத்து அவரது கட்-அவுட்டில் ஒட்டப்பட்டது.
இதனையடுத்து இந்த டாஸ்க் நாளையும் தொடரும் என பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments