கேப்டன்சி டாஸ்க்: தவறை உணர்ந்து பிராயசித்தம் செய்த பாலாஜி!

இந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க்கில் சோம், பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆகிய மூவர் கலந்து கொண்டிருந்த நிலையில் சோம் ஜெயிக்க கூடாது என்றும் அவர் ஒரு கைப்பொம்மை என்றும் நினைத்த பாலாஜி, சம்யுக்தா ஜெயிக்க உதவினார். இதனால் ஆரி உள்பட பலரிடம் இருந்து கடுமையான விமர்சனத்தையும் பாலாஜி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் பாலாஜிக்கே, சம்யுக்தாவை கேப்டன் ஆக்கியது தவறோ என்ற எண்ணமும் வந்துவிட்டது

இந்த நிலையில் இன்று ’இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார்? என்ற பிக்பாஸ் கேள்விக்கு அர்ச்சனா, நிஷா, உள்பட பலர் சோமுவை தேர்வு செய்த நிலையில் பாலாஜியும் சோம் பெயரை குறிப்பிட்டார். மேலும் தன்னால் தான் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்பதையும் அவர் வருத்தத்துடன் தெரிவித்து தனது தவறுக்கு பிராயசித்தமும் தேடிக்கொண்டார். இதுகுறித்து சம்யுக்தா பாலாஜியிடம் கேட்டபோது, ‘நான் தான் அனைவராலும் கார்னர் செய்யப்பட்டிருக்கின்றேன்’ என்று பதில் கூறியுள்ளார்.

அதேபோல் சிறப்பாக செயல்பட்ட இன்னொருவர் என ஆரியை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். ஆரியை சிறப்பாக செயல்பட்டவர் என சனம்ஷெட்டி, அனிதா, ஆஜித், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்தனர். ஆரியை சிறப்பாக செயல்பட்டவர் என போட்டியாளர்கள் கூற கூற சம்யுக்தாவின் முகம் மாறி வருவதும் இன்றைய புரமோவில் தெரிகிறது

More News

திமுக 7 பேரின் விடுதலையை நிராகரித்து விட்டு, அதிமுக மீது குற்றம் சொல்வதா??? தமிழக முதல்வர் காட்டம்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன்,

டிரம்ப் தொடுத்த சட்டப் போராட்டம் என்ன ஆனது??? அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்?

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விசுவின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பழம்பெரும் இயக்குனர், நடிகர் விசு கடந்த மார்ச் மாதம் காலமான நிலையில் அவரது இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

அரபு கத்தியில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்… இந்தியக் கேப்டனுக்கு குவியும் வாழ்த்துகள்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது 32 ஆவது பிறந்த நாளை துபாயில் கொண்டாடினார்.

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரம்… அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!!

இந்தியர்களின் பெரும் பண்டிகையான தீபாவளிக்கு மக்கள் பட்டாசுகளை வெடித்துக் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.