பிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே வித்தியாசமான போட்டியாளராக இருப்பவர் சுரேஷ் தான். பொதுவாக வயதான போட்டியாளர்கள் எனக்கென்ன என்று அமைதியாக இருப்பார்கள், அல்லது எப்பொழுதாவது மற்றவர்களை வம்புக்கு இழுப்பார்கள்
ஆனால் சுரேஷ் ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளரை வம்புக்கு இழுத்து புரமோவில் இடம் பிடித்துவிடுகிறார். கேலியாகவும் கிண்டலாகவும் நக்கலாகவும், சில சமயம் சீரியஸாகவும் பேசி வருகிறார். அதே சமயம் தன்னுடைய பேச்சு எல்லை மீறியது தெரிய வந்தால், உடனே தனது தவறை உணர்ந்து கொள்வது போல் மன்னிப்பும் கேட்டு சமாளித்துவிடுகிறார்.
இந்த சீசனில் மட்டுமல்ல, மொத்தம் உள்ள 4 சீசன்களையும் சேர்த்து சுரேஷ் தான் புத்திசாலித்தனமான போட்டியாளர் என்று பார்வையாளர்களுக்கு கொஞ்சம் லேட்டாக தெரிய வந்ததை அடுத்து தற்போது இவருக்கு ஆர்மிகளும் தொடங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நக்கல் மன்னனான சுரேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே நக்கல் நபராக இருந்து உள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் முதல் சீசனில் இருந்த போட்டியாளர்களில் ஒருவரான ஜூலியை கிண்டல் செய்து சுரேஷ் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது
#SureshChakravarthy ?????? #thatha's dubsmash !! #BiggBoss4Tamil pic.twitter.com/rx231WPwuC
— Arun Suresh Kumar (@Askmsd7) October 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments