வேலையே இல்லையா அவருக்கு? சுரேஷூடன் மீண்டும் மோதும் ரியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாலியான போட்டியாளர் என முதலில் கருதப்பட்ட ரியோ, திடீரென தனது முகத் திரையைக் கிழித்து ஆவேசமாக மாறினார். முதலில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தன்னை உதாரணம் காட்டி பேச கூடாது என்று சண்டை போட்டதில் இருந்தே அவருடைய முகமூடி கிழிந்துவிட்டதாக பார்வையாளர்கள் கருதினார்கள்

அதன் பின்னர் மீண்டும் மீண்டும் அவர் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மோதலில் ஈடுபட்டு வருவதும் நேற்றைய முகமூடி டாஸ்க்கின்போது அவருடைய முகமூடியை அதிகமானோர் கிழித்ததும் அவரை எரிச்சலுக்கு உள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய இரண்டாம் புரமோவில் மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ரியோவுக்கும் வாக்குவாதம் வருகிறது. நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மேலேயுள்ள அவர் என்னை கேட்டிருப்பார் என்று சுரேஷ் கூற, அதற்கு ’அவருக்கு வேற வேலையே இல்லையா நீங்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பீர்கள் உங்களுக்காக அவர் வந்து பேசிக்கொண்டே இருப்பாரா?’ என்று ரியோ கூற சுரேஷின் முகம் சுருங்கியது

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் வெளிப்படையாக யார் யாரை நாமினேஷன் செய்யலாம் என்று டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கால் போட்டியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது