பாலாஜி மீதிருந்த கொஞ்ச மரியாதையும் போச்சு: கிழிச்சி தொங்கவிட்ட சுஜா வருணி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் சுஜாவருணி தெரிவித்த கருத்தை பார்ப்போம்
முதலாவதாக சுரேஷ்: அர்ச்சனாவும் சுசித்ராவும் வருவதற்கு முன்னர் சுரேஷ் சக்ரவர்த்தி மிக பிரமாதமாக விளையாடினார். ஆனால் அவர்கள் இருவரும் வந்த பின்னர் திடீரென காணாமல் போனார். பிக்பாஸ் வீட்டிலேயே அவர் வயதில் பெரியவர். ஆனால் அந்த வயதிற்கேற்ற மரியாதையுடன் நடந்து கொள்ளாமல் இளைஞர்களுக்கு அவர் மல்லு கட்டுகிறார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் போட்டியிலேயே இல்லை. விளையாட்டையே மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது என்று கூறினார்
அதேபோல் ரம்யாவை பற்றி கூறும்போது ’ரம்யா ஒரு மோசமான விளையாட்டை விளையாடி வருகிறார். குறிப்பாக நீதிமன்றத்தில் சம்யுக்தா மற்றும் ஆரி ஆகிய இருவருக்கும் இடையில் கேஸ் முடிந்த பின்னர் ’தருதலை’ என்று அவர் உங்களைத் தான் கூறியது போல் எனக்கு தெரிகிறது என்று சம்யுக்தாவிடம் ரம்யா ஏற்றிவிட்டார். அதேபோல் அனிதா உணர்ச்சிவசப்பட்டு பேசி கொண்டிருக்கும் போது சிரித்து அவரை அவமதித்தார். இது மோசமான ஒரு செயல்
அதேபோல் சனம் பல இடங்களில் நம்மை இரிடேட் செய்திருந்தாலும் இந்த வாரம் அவர் மிகச்சரியாக விளையாடினார். அவரை ஒருசிலர் வேண்டுமென்றே கார்னர் செய்தனர்.
சுசித்ராவை பற்றி சுஜா கூறும்போது ’நீதிபதி என்ற பதவிக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதவர். அவர் மிகவும் மட்டமாக நீதிமன்றத்தை நடத்தினார் என்றும் விமர்சித்தார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வருபவர்கள் வெளியே நடந்ததை சொல்ல கூடாது என்பது விதி. ஆனால் அந்த விதியை சுசித்ராவின் பிரேக் செய்துவிட்டார் என குற்றஞ்சாட்டினார்
அடுத்ததாக சம்யுக்தா குறித்து கூறியபோது, ‘வேறு ஒருவரின் உதவி மூலம் கேப்டன் பதவியை பெற்ற அவர், அந்த பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆரியுடன் அவர் மோசமாக நடந்து கொண்டார். ஆரி என்ன சொன்னாலும் தப்பு என்று கூறுகின்றார். ஆரி என்ன நடந்தது என்று விரிவாக எடுத்துக் கூறியும் அவரது தவறு அவருக்கு புரியவில்லை. ஆரி கோபமாக பேசினாலும் அவரது பேச்சில் ஒரு தெளிவு, ஒரு நிதானம், ஒரு உண்மை இருக்கிறது. ஆனால் பாலாஜியிடம் அது சுத்தமாக இல்லை’ என்பதை கடைசி வரை சம்யுக்தா புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
பாலாஜி குறித்து சுஜா கூறியபோது, ‘பாலாஜி மீது ஓரளவுக்கு எனக்கு மரியாதை இருந்தது. ஆனால் தற்போது சுத்தமாக அது இல்லை. பிக்பாஸ் வீட்டில் ஒரு குருப்பிஸம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வைத்ததே பாலாஜிதான். ஆனால் இப்போது அவர் தான் ஒரு குரூப்பை வைத்துக் கொண்டு விளையாடி வருகிறார் என பாலாஜியை குற்றஞ்சாட்டினார்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஆரி ஒருவர்தான் மிகவும் நியாயமாக விளையாடுகிறார். அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும், கிண்டல் செய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவருடைய கேமை மிகச்சரியாக விளையாடுகிறார்
மொத்தத்தில் பிக்பாஸ் எடிட்டர்கள் தான் இந்த விளையாட்டில் மிகவும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். எதை மக்களுக்கு காண்பிக்க வேண்டும் காண்பிக்க கூடாது என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இதை போட்டியாளர்களும் புரிந்து விளையாட வேண்டும் என்று சுஜா வருணி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தனது கருத்தை கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments