close
Choose your channels

ஃபிளையிங் கிஸ் கொடுத்த ஷிவானி: ஹேப்பி மூடில் ஹவுஸ்மேட்!

Thursday, November 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே டாஸ்குகள் மூலம் சண்டை சச்சரவு மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது என்பதும். இதனால் பிக்பாஸ் வீடு ஒரே கலவர பூமியாக இருக்கிறது என்பதும் தெரிந்ததே. அவ்வப்போது பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் ஒரு மணி நேர நிகழ்ச்சியில் முக்கால் மணி நேரம் சண்டை சச்சரவை பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு கிட்டத்தட்ட அலுப்பு தட்டிவிட்டது என்றே கூறலாம்

எனவே பிக்பாஸ் இவற்றை கருத்தில் கொண்டு முதல்முறையாக மூளைக்கு வேலை கொடுத்து ஃபன் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். போட்டியாளர்கள் எப்எம் வானொலியில் வேலை பார்ப்பது போன்று நடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். அர்ச்சனா, சுசித்ரா, அனிதா போன்றவர்களுக்கு ஆர்ஜேவாக நடிப்பது கைவந்த கலை என்பதால் இந்த டாஸ்க் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்கும் என்பதால் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனா, ரம்யா, அனிதா உள்பட ஒருசிலர் இந்த டாஸ்க்கில் கேலியும் கிண்டலுமாக விளையாடி வருவதை பார்க்க முடிகிறது. இந்த கலகலப்பிலும் திடீரென இடையில் ஷிவானி யாருக்கோ பிளையிங் கிஸ் கொடுக்கிறார், யாருக்கே என்ன, அவர் யாருக்கு பிளையிங் கிஸ் கொடுப்பார் என உலகமே அறிந்ததுதான்

மொத்தத்தில் கடந்த சில நாட்களாக கலவர பூமியாக இருந்த பிக்பாஸ் வீடு, இன்று முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment