பாலாவை கண்டுகொள்ளாமல் ஒதுக்கிய ஷிவானி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் ஷிவானி மற்றும் சுரேஷ் தவிர அனைவரும் வந்து விட்டார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் ஆக எண்ட்ரி ஆகிறார். ஷிவானியின் வருகை போட்டியாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும், ஷிவானியும் தனது சக போட்டியாளர்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து ஒவ்வொருவரையும் கட்டிப் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் சனம் ஷெட்டி, ரம்யா ஆகியோர்களை கட்டி பிடித்த ஷிவானி, தன்னை ஆசையுடன் பார்க்க வந்த பாலாஜி அருகில் இருந்தும் அவரை கண்டுகொள்ளாமல் நேராக அர்ச்சனாவை சென்று அவரை கட்டிப்பிடித்துக்கொண்டார். இது பாலாஜிக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இதனை அடுத்து அவர் அந்த இடத்திலிருந்து சோகத்துடன் விலகி செல்வது போன்ற காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது.
அதேபோல் ஷிவானியை கண்டுகொள்ளாமல் அனிதாவும் அந்த இடத்திலிருந்து விலகி செல்லும் காட்சிகளும் முதல் புரமோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com