வலிய வந்து பேசிய பாலாவிடம் ஷிவானி கேட்ட கேள்விகள்!

பிக்பாஸ் வீட்டில் இன்று சிறப்பு விருந்தாளியாக ஷிவானி வந்தார் என்பதும் பாலாஜியை மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற அனைவரிடமும் கலகலப்பாக பேசினார் என்பதையும் முதல் புரமோவில் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரமோவில் ஷிவானியை சிங்க பெண்ணே என்று ரேகா பாராட்ட, சனம், ‘ரொம்ப கஷ்டமான டாஸ்க்’ என்று கூற அருகில் வேல்முருகனும் நின்றிருந்தார்.

இந்த நிலையில் அந்த பக்கம் வலிய வந்த பாலாஜியிடம் ஷிவானி ‘எப்படி இருக்கிறாய்’ என்று கேட்க அதற்கு பாலாஜி ’நன்றாக இருக்கிறேன்’ என்று கூறினார். பின்னர் ஷிவானி, ‘ஏன் டல்லாக இருக்கிறாய், உடம்பு சரி இல்லையா என்று கேட்க, ‘அதெல்லாம் இல்லை நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று பாலாஜி கூறினார். பின்னர் ‘நானும் வந்ததில் இருந்தே பார்க்கிறேன் டல்லாகவே இருக்கிறாய்’ என்று கேட்டுவிட்டு பாலாஜியின் பதிலைக் கூட எதிர்பாராமல் திரும்பி நின்றுகொண்டு ஷிவானி நடந்து சென்றது பாலாஜியை அவர் முற்றிலுமாக ஒதுக்குகிறார் என்பது உறுதியாக தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டினுள்ளே இருந்த 95 நாட்களிலும் குறிப்பாக ஷிவானியின் அம்மா வந்து விட்டுச் சென்ற பின்னரும் கூட பாலாஜியிடம் நெருக்கமான நட்பில் இருந்த ஷிவானி, வீட்டிற்கு சென்று வந்ததும் பாலாஜியிடம் இருந்து விலகி இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.