நீங்க என்ன பிக்பாஸ் அசிஸ்டெண்ட்டா? சம்யுக்தாவுக்கு எதிராக கிளம்பிய சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரமோவில் சனம்ஷெட்டியை சம்யுக்தாவும், சம்யுக்தாவை சனம்ஷெட்டியும் மாறி மாறி குறை சொல்லும் காட்சிகள் உள்ளன.

நேற்றைய டாஸ்க்கின்போது அனிதா கொஞ்சம் நீளமாக பேசியது குறித்து சம்யுக்தா கூறியதற்கு அனிதாவிடம் சனம் ஏத்தி விடுகிறார். அப்போது, ‘சனம், நீ ஏத்தி விட்ற பாரு என்று கூறி சிரிக்கும் சம்யுக்தா, டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட் என்று கூறுகிறார். அப்போது ரம்யா, கேப்ரில்லா, பாலாஜி ஆகியோர் உடன் உள்ளனர். அதேபோல் சனம்ஷெட்டி, ‘நீங்க என்ன பிக்பாஸ் அசிஸ்டெண்ட்டா? டைம் லிமிட்ல பேசுங்கன்னு ஒருத்தரை மட்டும் சொல்ரது தப்புதான்’ என்று சம்யுக்தா குறித்து சனம்ஷெட்டி கூறுகிறார்

அப்போது அனிதா, ‘எல்லாரும் சொல்ற தான் நானும் சொன்னேன், ஆனா என்னை மட்டும் சொல்றாங்கன்னு தான் வருத்தமாக இருக்கு என்றும், இதுவொரு சப்ப மேட்டரு எனக்கு தான் அசிங்கமா இருக்கு’ என்றும் கூறுகிறார்.

ஏற்கனவே சனம்ஷெட்டிக்கும் சம்யுக்தாவுக்கும் தங்கவேட்டை டாஸ்க்கின்போது பிரச்சனை எழுந்தது. இந்த நிலையில் சம்யுக்தா கூறியதை அனிதாவே பெரிதாக எடுத்து கொள்ளாதபோது சனம்ஷெட்டி அவரை ஏற்றி விடுவது இன்னொரு பிரச்சனைக்கு அவர் தூண்டிவிடுவதாகவே தெரிகிறது

More News

பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பா.ஜ.க தொண்டர்கள்… பிரதமர் கண்டனம்!!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த 3 தொண்டர்கள் பயங்கரவாதிகளால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

பிறந்த குழந்தையை ஃப்ரிசரில் வைத்த இளம்பெண்…

ரஷ்யாவில் 14 வயது சிறுமி ஒருவர் தனக்கு ஏற்பட்ட கர்ப்பத்தை பெற்றோரிடம் இருந்து மறைப்பதற்காக பிறந்த குழந்தையை

ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் மர்ம நோய்… விஞ்ஞானிகளுக்கு இடையே ஏற்பட்ட புதிய அதிர்ச்சி!!!

அமெரிக்காவில் இதுவரை கவனத்தில் வராத புதிய வகை நோய்த் தாக்கம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

நீங்கள் எங்கள் விலைமதிப்பற்ற ரத்தினம்: ரஜினி குறித்து குஷ்பு டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வர மாட்டார் என்றும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் இருவேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் மாறி மாறி பதிவு செய்யப்படுகிறது

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்: 300 மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வாய்ப்பு

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்யும் மசோதா சமீபத்தில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது