நீங்க என்ன பிக்பாஸ் அசிஸ்டெண்ட்டா? சம்யுக்தாவுக்கு எதிராக கிளம்பிய சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரமோவில் சனம்ஷெட்டியை சம்யுக்தாவும், சம்யுக்தாவை சனம்ஷெட்டியும் மாறி மாறி குறை சொல்லும் காட்சிகள் உள்ளன.

நேற்றைய டாஸ்க்கின்போது அனிதா கொஞ்சம் நீளமாக பேசியது குறித்து சம்யுக்தா கூறியதற்கு அனிதாவிடம் சனம் ஏத்தி விடுகிறார். அப்போது, ‘சனம், நீ ஏத்தி விட்ற பாரு என்று கூறி சிரிக்கும் சம்யுக்தா, டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட் என்று கூறுகிறார். அப்போது ரம்யா, கேப்ரில்லா, பாலாஜி ஆகியோர் உடன் உள்ளனர். அதேபோல் சனம்ஷெட்டி, ‘நீங்க என்ன பிக்பாஸ் அசிஸ்டெண்ட்டா? டைம் லிமிட்ல பேசுங்கன்னு ஒருத்தரை மட்டும் சொல்ரது தப்புதான்’ என்று சம்யுக்தா குறித்து சனம்ஷெட்டி கூறுகிறார்

அப்போது அனிதா, ‘எல்லாரும் சொல்ற தான் நானும் சொன்னேன், ஆனா என்னை மட்டும் சொல்றாங்கன்னு தான் வருத்தமாக இருக்கு என்றும், இதுவொரு சப்ப மேட்டரு எனக்கு தான் அசிங்கமா இருக்கு’ என்றும் கூறுகிறார்.

ஏற்கனவே சனம்ஷெட்டிக்கும் சம்யுக்தாவுக்கும் தங்கவேட்டை டாஸ்க்கின்போது பிரச்சனை எழுந்தது. இந்த நிலையில் சம்யுக்தா கூறியதை அனிதாவே பெரிதாக எடுத்து கொள்ளாதபோது சனம்ஷெட்டி அவரை ஏற்றி விடுவது இன்னொரு பிரச்சனைக்கு அவர் தூண்டிவிடுவதாகவே தெரிகிறது