எவிக்சனில் திடீர் திருப்பம்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா?

  • IndiaGlitz, [Saturday,December 05 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆரி,அனிதா, ஷிவானி, ஆஜித்ம் ரம்யா, நிஷா மற்றும் சனம் ஆகிய ஏழு பேர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நேற்று வரை ஷிவானி தான் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததாகவும் அவரை அடுத்து அஜித் மற்றும் நிஷா ஆகியோர் குறைவான வாக்குகளைப் பெற்று இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் நேற்றுடன் வாக்களிக்கும் நேரம் முடிவடைந்ததை அடுத்து தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சனம் தான் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதாகவும் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

சனம் இந்த வாரம் முழுவதும் நன்றாக விளையாடினார் என்பதும் தனது வாதத்தை சரியாக முன் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கால்செண்டர் டாஸ்க்கில் 1 முதல் 13 வரையிலான ரேட்டிங் பிரச்சினையின் போது மட்டும் அவர் பிடிவாதமாக இருந்து இரண்டாவது இடத்தை அனிதாவிடம் இருந்து பிடுங்கி கொண்டது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அதனால் அவருக்கு வாக்குகள் குறைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறதுஇருப்பினும் கண்டெண்ட் கொடுக்காத போட்டியாளர்கள் ஒரு சிலர் இருக்கும் போது அவ்வப்போது கண்டெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் சனம் ஷெட்டியை பார்வையாளர்கள் வெளியேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

பாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள் 

தமிழ் திரையுலகில் திறமையாக நடிக்க தெரிந்த மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் அஞ்சலி என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பக்கத்து வீட்டு பெண் போன்ற கேரக்டர், வாயாடி பெண் போன்ற கேரக்டரில்

இந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா? அதிர்ச்சியில் ஆர்மியினர்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்சன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஷிவானி குறைவான ஓட்டுக்களை

ரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற பலவருட கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது என்பதும் டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும்,

நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா???

அமெரிக்க அதிபராக இருந்துவரும் டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையை விட்டு காலி செய்யப் போகிறார்.