அடுத்த வாரம் கேப்டன் ஆரி? கதி கலங்கும் சம்யுக்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர்களாக ஆரி, சோம் மற்றும் நிஷா ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் வைக்கப்படும் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் அடுத்தவார கேப்டனாக தேர்வு செய்யப்படுவார்.

அடுத்த வார கேப்டன் டாஸ்க்கில் கண்டிப்பாக ஆரி மற்றும் சோம் ஆகிய இருவருக்கும் தான் கடுமையான போட்டி இருக்கும் என்றும் அதில் ஆரி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த வாரம் சிறப்பாக செயல்படும் போட்டியாளர்களில் ஒருவராக ஆரி தேர்வு செய்யும்போது சம்யுக்தாவின் முகம் மாறுவதை முதல் புரமோவிலேயே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் சக போட்டியாளர்களிடம் சம்யுக்தா புலம்பி வருகிறார். நீதிமன்ற அறையில் ஆரி கத்தியதை யாருமே தவறாக பார்க்கவில்லையா? பிறகு எப்படி அவரை இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளராக தேர்வு செய்கிறீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

சம்யுக்தா இந்த வாரம் அதிர்ஷ்டத்தில் கேப்டனாகி ஆரி மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில், அடுத்த வாரம் ஆரி கேப்டன் ஆகிவிட்டால் சம்யுக்தாவுக்கு அது அப்படியே பூமராங் மாதிரி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சம்யுக்தா கதி கலங்கி இருப்பதாக ஆஜித்திடம் அவர் புலம்புவதில் இருந்து தெரியவருகிறது .

அடுத்த வாரம் கேப்டனாக ஆரி தேர்வு செய்யப்பட்டால் பல தரமான சம்பவங்கள் சம்யுக்தாவுக்கு காத்து இருப்பதாகவே கருதப்படுகிறது.

More News

தனுஷை அடுத்து பாலிவுட் நடிகருக்கு ஜோடியான 'மாஸ்டர்' மாளவிகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருந்தாலும் மாளவிகா மோகனனுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கித் தந்தது தளபதி விஜய்யின்

'மாஸ்டர்' டீசர், டிரைலர் எப்போது? லோகேஷ் கனகராஜ் தகவல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸ்க்கு கடந்த ஏப்ரல் மாதமே தயாராக உள்ளது என்பதும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக இந்த படம் ரிலீசாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக வரும் 'நாலு நிமிஷம்'

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

கட்டியணைத்து முத்தமிடும் நட்சத்திர ஜோடி: வைரலாகும் புகைப்படங்கள்!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உதயநிதியின் அடுத்த படம்: நாயகி, இயக்குனர் அறிவிப்பு!

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்குவது மகிழ்திருமேனி என்ற செய்திகள் ஏற்கனவே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரபூர்வ அறிவிப்பு