குறும்படம் போட்டு பாலாஜி ஆதரவாளரை வெளியேற்றினாரா கமல்?

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று யார் வெளியேற்றப்படுகிறார் என்பது குறித்த தகவலை கூறும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் இருந்தாலும் யார் வெளியேற்றப்படுகிறார் என்ற காட்சிகள் அதில் இல்லை. இருப்பினும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி சம்யுக்தா தான் வெளியேற்றப்பட்டார் என்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது

அதுமட்டுமின்றி இன்றைய நிகழ்ச்சியில் சனம் மற்றும் சம்யுக்தாவின் போன் உரையாடல் குறித்து கமல்ஹாசன் அலசுகிறார் என்றும், வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறிய சர்ச்சைக்குரிய வார்த்தை மற்றும் தாய்மையை புண்படுத்தியதாக சம்யுக்தா கூறிய குற்றச்சாட்டு ஆகியவ்ற்றுக்கு இரண்டு குறும்படங்களை கமல்ஹாசன் போட்டு காண்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த சீசனில் திரையிடப்படும் முதல் குறும்படங்கள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இந்த வாரம் கேப்டனாக இருந்த ரியோவின் கேப்டன்ஷிப் எப்படி இருந்தது என்பது குறித்த ரேட்டிங் கணக்கெடுப்பும் இன்றைய நிகழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. மேலும் ஏற்கனவே பாலா மற்றும் ஆரி ஆகிய இருவரும் நேற்று சேவ் செய்யப்பட்ட நிலையில் இன்று சனம், நிஷா, ரமேஷ், சோம், ஆகியோர்களும் சேவ் செய்யப்பட்டதாகவும் சம்யுக்தா எவிக்ட் செய்யப்பட்டதாகவும் கமலஹாசன் அறிவித்துள்ளதாக தெரிகிறது

இந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த டாப்புள் கார்ட் அனிதாவுக்கு கிடைத்ததன் காரணமாக சம்யுக்தா இந்த வாரம் வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சம்யுக்தாவை வெளியேற்றியதில் அனிதாவுக்கு பெரும்பங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது