சம்யுக்தாவை கதறி அழ வைத்த பிக்பாஸ்: செண்டிமெண்ட் ஆரம்பமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினரையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பியும், நேரில் வரவழைத்தும் சென்டிமெண்ட் காட்சிகள் ஆரம்பமாவது உண்டு. அந்த வகையில் ஏற்கனவே அர்ச்சனாவுக்கு ஒரு வீடியோ பார்சல் செய்யப்பட்ட நிலையில் இன்று சமியுக்தாவுக்கு ஒரு வீடியோவை பிக்பாஸ் அனுப்பி உள்ளார்.

இன்றைய மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் டிவியில் வீடியோ ஒன்று ஒளிபரப்பாகிறது. அதில் சம்யுக்தாவின் குழந்தைக்கு பிறந்தநாள் என்றும் பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் கொண்டாடுவது போன்றும் உள்ளது.

தனது குழந்தையை ஒரு மாதத்திற்கு பின் வீடியோவில் பார்த்த சம்யுக்தா ஒரு கட்டத்தில் சந்தோஷத்தில் கத்தியும் அதன்பின் பிரிவை நினைத்து கதறி அழுத காட்சியும், அவரை சக போட்டியாளர்கள் தேற்றி வரும் காட்சியும் உள்ளது. சம்யுக்தாவின் தாய்ப்பாசத்தை காண்பித்து பார்வையாளர்களை நெகிழ வைத்த பிக்பாஸ், அடுத்ததாக யாருடைய வீடியோவை ஒளிபரப்ப போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

பைக்கில் வந்த அஜித்: கரவொலி எழுப்பி வரவேற்ற 'வலிமை' படக்குழு!

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

மீண்டும் ஒரு ஆழ்துளை துயர சம்பவம்: 3 வயது குழந்தையின் நிலை என்ன?

தமிழகத்தில் சுஜித் என்ற சிறுவன் ஆள்துளை கிணற்றில் கடந்த ஆண்டு விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பதும் அதன் பின்னராவது

க/பெ ரணசிங்கம்' இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த சிறப்பு பரிசு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் கடந்த மாதம் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியானது

அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பின் உள்ள தற்கொலை வழக்கு என்ன? பரபரப்பு தகவல்!

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் எந்த வழக்குக்காக கைது செய்யப்பட்டார்

நடமாடும் 'அம்மா உணவகம்': தமிழக முதல்வரின் அசத்தல் திட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக நடமாடும் அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது