ரம்யா மீது இத்தனை பெரிய கடுப்பா ரியோ மனைவிக்கு?

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் நேற்று முதல் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நேற்று ஷிவானியின் அம்மா மற்றும் பாலாஜியின் சகோதரர் வந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ரம்யாவின் தாயார் மற்றும் சகோதரர் வந்திருந்த காட்சிகளை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இரண்டாவது புரமோவில் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். ‘காதலே காதலே’ என்ற பின்னணி பாடலுடன் வரும் மனைவியை கட்டியணைத்து ரியோ அழும் காட்சிகள் சென்டிமென்டின் உச்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஸ்ருதி பேசியபோது ’நண்பர்களின் கடுப்பு’ என்ற கூறி ஒரு எபிசோடில் நீ பாட்டுக்கு குடுகுடுன்னு ஓடிப்போய் ரம்யாவை அலேக்காக தூக்கியதுதான் நண்பர்களின் கடுப்பு என்று சொல்ல, அதற்கு ரியோ, ‘இது நண்பர்களின் கடுப்பு மாதிரி தெரியலையே’ என்று ஸ்ருதியை கிண்டலுடன் பார்ப்பது ரம்யா உள்பட ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் கலகலப்பாக்கியது

இருப்பினும் ரியோவின் குழந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வராமல் இருந்தது ரியோ உள்பட அனைவருக்கும் ஏமாற்றமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'வேலுநாச்சியார்' படத்தில் நடிக்கின்றாரா நயன்தாரா? அதிகாரபூர்வ அறிக்கை!

ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா

அவர் தான் காரணம்: விஜே சித்ராவின் உதவியாளர் திடுக் தகவல்!

சமீபத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் சித்ராவிடம் உதவியாளராக இருந்த சலீம்

குளிருக்கு ஆல்கஹால் செட் ஆகாதா??? இந்திய வானிலையின் எச்சரிக்கை அறிவிப்பு!!!

குளிர்காலத்தில் கொஞ்சம் ஆல்கஹால் இருந்தாலே போதும் எனப் பரவலான கருத்து நிலவிவரும் சூழலில் அந்தக் கருத்து தவறானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

கண் புற்றுநோய்க்கு புது சிகிச்சை… இந்திய விஞ்ஞானிகளின் அசத்தல் சாதனை!!!

இந்தியாவின் பாபா அணுசக்தி மையம் கடந்த சில வருடங்களாக மக்களுக்குப் பயன்படும் பல புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்துள்ளது.

அதுவும் நடக்காம போச்சே: தந்தையான யோகிபாபுவின் ஜாலி கமெண்ட்!

கல்யாண சாப்பாடு தான் போட முடியவில்லை என்றால் சீமந்த சாப்பாடாவது போடலாம் என்று நினைத்தேன், ஆனால் அதுவும் நடக்காமல் போச்சு என்று நண்பர்களிடம் யோகி பாபு ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளார்