நிஷாவை வெளியேற்ற சொல்லும் ரியோ: நடுநிலையாளர் என காட்டவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்பில் உள்ள ஆறு பேர்களும் ஒன்றாக சேர்ந்து மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்து வருகிறார்கள் என்பது கடந்த பல வாரங்களாக பார்வையாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. கமல்ஹாசனும் இது குறித்து அவ்வப்போது மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறி வந்தும் அர்ச்சனாவின் அன்பு குரூப் திருந்துவதாக தெரியவில்லை
இந்த நிலையில் நேற்று அர்ச்சனா குரூப்பில் உள்ள ரமேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று ஒருவர் வெளியேற்றப்பட இருக்கிறார். இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ள ரம்யா, நிஷா, கேபி, சோம் மற்றும் ஷிவானி ஆகிய 5 பேர்களில் மூன்று பேர்கள் அர்ச்சனா குரூப்பில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று யாரை காப்பாற்றலாம் என்று நினைக்கிறீர்கள் என்று கமலஹாசன் கேட்க அதற்கு நிஷாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வரும் ரியோ, ஷிவானியை குறிப்பிடுகிறார். நிஷாவை காப்பாற்றப்படும் போட்டியாளராக குறிப்பிடாமல் ஷிவானியை குறிப்பிடுவதால் தான் நடுநிலையாளர் என்பதை வெளிக்காட்டும் கொள்ளலாம் என்பதற்காக கூறுகிறாரா? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
இருப்பினும் நேற்றைய நிகழ்ச்சியின்போது அர்ச்சனாவிடம் நிஷா வெளியே செல்ல மாட்டார் என்று ஆறுதல் கூறி தனது குருப்பிஸத்தை வெளிக்காட்டி கொண்டவர் தான் இந்த ரியோ என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஷிவானி வெளியேறக்கூடாது என பாலாஜி கூறியதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்றாலும் நிஷா வெளியேறக்கூடாது என்று அனிதா கூறியது ஆச்சரியம் அளித்துள்ளது
#BiggBossTamil இல் இன்று.. #Day70 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/3CI3fYBQ2g
— Vijay Television (@vijaytelevision) December 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments