சோம் கேட்ட சரியான கேள்வி: ஒப்புக்கொண்ட ஆரி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை குறி வைத்து அனைத்து போட்டியாளர்களும் விளையாடி வருவதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் இன்று குறை சொல்லும் டாஸ்கில் ஆரியை குறித்தே சக போட்டியாளர்கள் குறை கூறி வருகின்றனர்.
இன்றைய மூன்றாம் புரோமா வீடியோவில் சோம் கூறியபோது, ‘குறைசொல்லும் டாஸ்க் இப்போதுதான் வந்துள்ளது. முதல் நாளிலிருந்தே இந்த வீட்டில் ஆரி தான் குறை சொல்வதை நான் பார்த்துள்ளேன். என்னிடம் மற்றவர்களைப் பற்றிக் குறைகூறி பேசியுள்ளாய். அதேபோல் என்னை பற்றி மற்றவர்களிடம் பேசியிருக்க மாட்டாய் என்பதற்கு என்ன நிச்சயம்? என்று ஒரு சரியான கேள்வி கேட்க அதற்கு ஆரி, ‘ஆம் எல்லாரிடமும் எல்லாரும் பற்றியும் பேசி இருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். அதற்கு நான் முடித்து விடுகிறேன் என்று கூறி அதன்பின் தொடர்கிறார்
அதன் பின்னர் வரும் ரியோ, ‘ஆரி சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சுருக்கமாக சொல்லி விட்டு போய்விட்டார் என்றால் அவருக்கு எதிராக யாருமே இருக்க முடியாது. மற்றவர்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான முயற்சியும் உங்கள் வாழ்க்கையில் போட்டீர்கள் என்றால் அது உங்கள் வாழ்க்கையை மிகவும் அழகானதாக மாற்றும் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார்
ஆக ரியோ, சோம் ஆகிய இருவருமே ஆரி குறித்தே குறை சொல்லியுள்ளார்கள். பாலாஜி மற்றும் ரம்யா பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆரியை பற்றி தான் கண்டிப்பாக குறை சொல்வார்கள். ஷிவானி மற்றும் கேபி யாரைப் பற்றி குறை சொல்கிறார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com