என்னடா இது அதிசயமா இருக்கு, எல்லாரும் ஆரியை திடீர்ன்னு புகழ்றாங்க!

பிக்பாஸ் வீட்டில் ஆரி கடந்த 90 நாட்களுக்கும் மேலாக சூப்பராக விளையாடி வரும் நிலையில் தற்போது ஆரியை மற்ற ஆறு போட்டியாளர்களும் குறி வைத்து உள்ளனர் என்பதும் ஆனாலும் ஆரி ஆறு பேரையும் சமாளித்து திறமையாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று திடீரென ஆரியை அனைத்து போட்டியாளர்களும் பாராட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கின் அடுத்த சுற்றில் வாக்கிய துண்டில் இருக்கும் வாக்கியத்தை எடுத்து அந்த வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்தோடு சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதனையடுத்து ஒவ்வொருவரும் ஒரு வாக்கிய துண்டை எடுத்து விளக்கமளிக்கின்றனர்.

அப்போது ஆரி தனக்கு வந்த வாக்கிய துண்டை எடுத்து இதற்கு விளக்கம் சொல்லி நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று கூறி சிரிக்கிறார். பெரும்பாலும் சீரியஸான முகத்துடன் இருக்கும் ஆரி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் சிரித்ததை பார்த்த சக போட்டியாளர்கள் ஆரிக்கு சிரிக்கவும் வருமா? என்று ஆச்சரியப்படுகின்றனர்

இதுகுறித்து ரியோ கூறிய போது ’ஆரி முதன்முதலாக ஒரு கமெண்டடை ஜாலியாக எடுத்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறுகிறார். இதனையடுத்து ரம்யாவும் ’வாவ் என்ன ஒரு இம்ப்ரூவ்மெண்ட் என்று ஆரிக்கு பாராட்டு தெரிவிக்கின்றார். பாலாஜி உள்பட அனைவரும் ஆரியின் சிரிப்பை ரசிக்கின்றனர். திடீரென ஆரியை அவரது எதிரிகளே பாராட்டுவதும் ஒரு ஸ்டாட்டர்ஜியா? அல்லது ஆரி உண்மையாகவே தனது மனதை மாற்றி கொண்டு இனிமேல் ஜாலியாக விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்