அன்பு குரூப்பை மீண்டும் உடைக்கின்றதா டாஸ்க்: ரியோ-அர்ச்சனா மோதல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக அர்ச்சனா தலைமையிலான அன்பு குரூப் செயல்பட்டு வருவதாகவும் இந்த குரூப் தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை வீட்டிலிருந்து தந்திரமாக வெளியேற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது
கமல்ஹாசனும் இந்த குரூப் குறித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் பதிவுசெய்து பிக்பாஸ் என்பது தனி திறமையுடன் விளையாட வேண்டிய விளையாட்டு என்றும் குழுவாக விளையாடும் விளையாட்டு அல்ல என்றும் கூறினார்
இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த புதிய மனிதா டாஸ்க்கின்போது அன்பு குரூப் சுக்குநூறாக உடைந்தது. அந்த குரூப்பில் மிகவும் நெருக்கமாக இருந்த நிஷா மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே பிரச்சினை வந்தது என்பதும் அதன் காரணமாக நிஷா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. அதேபோல் அன்பு குரூப்பில் இருந்த ரமேஷும் எவிக்ட் செய்யப்பட்டார்
இந்த நிலையில் அன்பு குரூப்பில் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் என்று கூறப்படும் ரியோ மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே இன்று பிரச்சனை வந்துள்ளது. இன்று நடக்கும் கோழிப்பண்ணை டாஸ்க்கில் ஏற்கனவே ஆரியுடன் மோதிய அர்ச்சனா தற்போதைய மூன்றாவது புரோமோ வீடியோவில் ரியோவுடன் மோதும் காட்சிகள் உள்ளன
அதே நேரத்தில் எலியும் பூனையுமாக இருந்த ரியோ மற்றும் பாலாஜி இருவரும் நெருக்கமான நட்புடன் பேசிக்கொள்வதும், அனிதா மற்றும் அர்ச்சனா நெருக்கமாக டாஸ்க் குறித்து டிஸ்கஸ் செய்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
மொத்தத்தில் இன்றைய புரமோ காட்சிகளை வைத்து எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் இன்றைய முழு நிகழ்ச்சியை பார்த்து உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்
#Day72 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/XTjRcneyOF
— Vijay Television (@vijaytelevision) December 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments