இந்த வார மோசமான போட்டியாளர்கள்: முதல்முறையாக மோதும் நிஷா-சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சிறந்த போட்டியாளர்களும் மோசமான போட்டியாளர்களும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். சிறந்த போட்டியாளர்கள் அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் போட்டியில் தேர்வு பெறுவார்கள் என்பதும், மோசமான போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதும் தெரிந்தது
அந்த வகையில் இன்றைய மூன்றாம் புரமோவில் மோசமான போட்டியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் நாம் எதிர்பார்த்தபடியே ரியோவை சனம் நாமினேட் செய்கிறார். கால்சென்டர் டாஸ்க்கில் சனம் மற்றும் அனிதா ஆகியோர்களின் நட்பை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் ரியோவை நாமினேட் செய்வது போல் தெரிகிறது
சனம்ஷெட்டியை அடுத்து வந்த நிஷா, தங்கள் குரூப்பில் உள்ள ரியோவை சனம் நாமினேட் செய்ததால் அவர் சனம்ஷெட்டியை நாமினேட் செய்தார். அதேபோல் பாலாஜி ஆரியை நாமினேட் செய்தார். கடைசியில் ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் மோசமான போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டது
இந்த அறிவிப்பின்போது குறுக்கிட்ட சனம், ‘இதில் தனிப்பட்ட பகையும் கலந்திருக்கிறது என்று கூற உடனே முதல் முறையாக நிஷா பொங்கி எழுந்தார். நிஷா-சனம் வாக்குவாதத்துடன் இன்றைய மூன்றாம் புரமோ முடிவடைகிறது
பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இல்லை என்று அனைத்து போட்டியாளர்களும் கூறி வந்தாலும் சிறந்த போட்டியாளர் மற்றும் மோசமான போட்டியாளர்களின் தேர்வின்போது அப்பட்டமாக குரூப்பிஸம் இருப்பது தெரிய வருகிறது என்பதுதான் உண்மை
Promo 3 ??#biggbosstamilgalatta #Promo3 #BBTamilSeason4 #BiggBossTamil4 #BiggBoss4Tamil #BiggBoss4 #BiggBossTamil#biggbossseason4 #பிக்பாஸ்
— ?? ᴍɪɴɪ ?? (@Kuttymaa_) November 27, 2020
Credit ?? https://t.co/c0begzZ7jF pic.twitter.com/JgvbkE2jYQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com