2 செல்லக்குட்டிகளை மிஸ் செய்கிறேன்: பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடியே நடிகை ரேகா முதல் போட்டியாளராக வெளியேறினார் என்பதும் அவரை கண்ணீருடன் அனைவரும் வழியனுப்பி வைத்தார்கள் என்பதும் தெரிந்ததே
குறிப்பாக ரேகா வெளியேற்றத்தை தாங்கமுடியாமல் ஷிவானி கண்ணீர் விட்டு கதறி அழுததும் பாலாஜி சோகமே உருவாக இருந்ததும் சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவாக ஷிவானி மற்றும் பாலாஜி ஆகிய இரண்டு செல்லாக்குட்டிகளையும் நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்றும் கூறி ’உம்மா’ என்று ஒரு முத்தத்தையும் பதிவு செய்துள்ளார்
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஷிவானி அதிகம் யாரிடமும் பேசாமல் இருந்தாலும் அவரிடம் வலியப் போய் பேசி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர ரேகா முயற்சி செய்தார் என்பதும் அதனால் ரேகாவின் பிரிவை முடியாமல் ஷிவானி கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலாஜிக்கும் அவ்வப்போது அறிவுரை கூறி வந்த ரேகா வெளியேறியது அவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com